ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் சித்தார்த்தா சங்கர். தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ள சித்தார்த்தா இதற்கு முன் சைத்தான், ஐங்கரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நடிப்புக்காக டாக்டர் படிப்பை கைவிட்டதாக கூறுகிறார். சத்யாவில் ரம்யா நம்பீசன் கணவராக நடித்துள்ள அவர் மேலும் கூறியதாவது:
நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை. ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சாரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான் படத்தில் நடிக்க வைத்தார். படத்துக்காக மொட்டை அடித்தேன். அந்த படத்தைப்பார்த்து விட்டு எனக்கு ஐங்கரன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அது படம் முழுக்க வரும் வில்லன் ரோல்.
அந்த படம் நடித்து கொண்டிருக்கும் போதே சத்யா படத்துக்குகாக நடிக்க ஆடிசன் போனேன் என் நடிப்பைப் பார்த்ததும் சிபிராஜூக்கு பிடித்து போனது அதனால் ஓகே பண்ணினார். படத்தில் வில்லன் ரோல் என்றாலும் முக்கியமான் ரோல் அது. ரம்யா நம்பீசன் எனக்கு மனைவியாக நடித்தார் அவருடன் நெருக்கமான கட்சியில் நடிக்க கூச்சமாக இருந்தது. ஆனால் அவர் தான் எப்படி கட்டிபிடிக்க வேண்டும் எப்படி வலிக்காமல் கையை பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.
சத்யா படத்தைப்பார்த்து விட்டு ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு, விடியுமுன் இயக்குனர் பாலகுமார் ஆகியோர் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். என்னை பெருத்தவரை நடிப்புதான் முக்கியம், எந்த கதாபாத்திரம் என்பது முக்கியமல்ல. நாயகனாக நடிப்பதை விட வில்லனக நடித்தால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படலாம். ரசிகர்கள் கவனத்துக்கு வரமுடியும். அதனால் ரகுவரன் மாதிரியான மெஜஸ்டிக்கான வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார் சித்தார்த்தா சங்கர்.