ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் உயரம் குறைவான நடிகர் அம்பானி சங்கர். ஜி, ஆறு, வல்லவன், கருப்பசாமி குத்தகைதாரர், இந்திரலோகத்தில் நா அழகப்பன், குசேலன், பட்டத்து யானை உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்ததால் அம்பானி சங்கர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்பானி சங்கர், மதுரையில் உடல் ஊனமுற்றவர்களுக்காக நடந்த மாநில பாரா பாட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இதில் அவர் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் அருண் சுயம்பு என்பவருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அம்பானி சங்கர் அணி வெற்றி பெற்றது. இதில் அம்பானி சங்கருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அம்பானி சங்கர்.