Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஜயகாந்த் மகன் பாட்டு

10 டிச, 2017 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth-son-movie-song-used-by-political-parties-in-RK-nagar-election

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் மதுர வீரன். புதுமுகம் மீனாட்சி, சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, பால சரவணன், மைம்கோபி உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் என்ன நடக்குது நாட்டுல... என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். இன்றை நாட்டுநடப்பை சொல்லும் இந்த பாடலை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிர்கட்சிகள் பிரச்சார பாடலாக பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் பி.ஜி.முத்தையா கூறியதாவது:



படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர் “ என்ன நடக்குது நாட்டுல “ என்று தொடங்கும் பாடல் வரிகளை எனக்கு எழுதி தந்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்களிடம் இந்த பாடல் சென்றடைந்துள்ளது. அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்குவகிக்கிறது.


இப்பாடலின் இசை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி டோலக் மற்றும் ஹார்மோனியம் என்ற இரண்டே கருவிகளை கொண்டு இதை உருவாக்கியுள்ளார். பாடல் வரிகளின் முக்கியத்துவம் மற்றும் நிஜமான மேடை பாடலை போல் இப்பாடல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தோஷ் தயாநிதி இரண்டே கருவிகளை கொண்டு இப்பாடலை உருவாக்கியதால் இப்பாடல் தற்போது மேடையில் இசையமைத்து பாடுபவர்களுக்கு எளிமையாக உள்ளது.


நண்பர்கள் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ என்ன நடக்குது நாட்டுல “ பட்டுக்கோட்டையார் பாடலை போல் உள்ளது என்று கூறியது , நான் நினைத்தது போல் இப்பாடல் வந்துள்ளது என்ற நம்பிக்கையை தந்தது என்றார் இயக்குநர் பி.ஜி.முத்தையா.


Advertisement
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் திடீர் நன்றிஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: தமிழக ... தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் அடிதடி, ரகளை தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ...


வாசகர் கருத்து (3)

NalamVirumbi - Chennai,இந்தியா
11 டிச, 2017 - 06:18 Report Abuse
NalamVirumbi why credit goes to him and not the lyricist Yuvabharathy. Giving credits to right people should be from nettizens
Rate this:
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
10 டிச, 2017 - 23:15 Report Abuse
X. Rosario Rajkumar என்ன நடக்குது நாட்டுலே? என்னதான் நடக்கலே இந்த நாட்டிலே?
Rate this:
Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு
10 டிச, 2017 - 11:44 Report Abuse
Balaji nice song,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in