பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடித்து வரும் படம் 2.ஓ. தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அக்சய்குமார் 10-க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ரஜினியும் சில கெட்டப்புகளில் தோன்றுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
அதோடு, இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மாதக்கணக்கில் நடந்து வரும் நிலையில், 2018 ஜனவரியில் 2.ஓ படம் திரைக்கு வருவதாக கூறப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்போது ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு மாற்றி விட்டனர். அதோடு, இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே ரூ. 100 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள்.
மேலும், 2.ஓ படம் இப்படி தாமதமானதற்கு முழுக்காரணம் விஎப்எக்ஸ் நிறுவனம்தானாம். அதனால் இந்த தாமதத்திற்காக அந்த நிறுவனம் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.