ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த படம் குயின். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன் தமிழ்ப்பதிப்பில் காஜல்அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யுடர்ன் படமும் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து சத்யா படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அந்த படத்தை இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து யுடர்ன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்கயிருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ஜனவரி மாதம் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த யுடர்ன் படம் ஒரு மர்மக்கொலையை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது.