வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு! | எனக்கு மாடர்ன் டிரெஸ்னா உசுரு...! உருகுகிறார், "பூ பார்வதி | சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்! | உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! | பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்! | நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! | நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்!! போலீசில் புகார் | நானும் ரவுடிதான்டா, கோதாவில் குதிக்கிறார் கொலவெறி அனிருத்! | கார்த்திக்கிற்கான கதையை முடிவு செய்வது சூர்யாதானாம்! | விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்! |
கோலிவுட், டோலிவுட் என்று அசத்திய தமன்னாவை இப்போது பாலிவுட்டும் அழைக்கிறது. ஆனால் அம்மணியோ பாலிவுட் வேண்டாம் என்கிறாராம். தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு முன்பு தமன்னா, சினிமாவில் அறிமுகமானதே பாலிவுட்டில் தான். சந்த் ஷா ரோஷன் செக்ரா என்ற படத்தில் அறிமுகமான தமன்னா, அதன்பின்னர் எந்த இந்தி படங்களிலும் நடிக்கவில்லை. மாறாக தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்று நம்பர்-1 நாயகியாக வலம் வந்தார். இப்போதும் தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டிலிருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறதாம் தமன்னாவுக்கு, ஆனால் அவற்றையெல்லாம் மறுத்து வருகிறாராம். சமீபத்தில் கூட அஜய் தேவ்கனின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் இந்த அயன் பொண்ணு.
இதுபற்றி தமன்னாவின் தந்தை கூறுகையில், இன்றைய தேதிக்கு 4 இந்தி பட வாய்ப்புகள் தமன்னாவுக்கு வந்தது. ஆனால் எல்லாத்தையும் மறுத்துவிட்டார். தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் இருப்பதால், பாலிவுட் படங்களில் நடிக்க தமன்னா நாட்டம் இல்லாமல் இருக்கிறார். இப்போதைக்கு தமிழ் படங்களில் தான் நடிக்க ரொம்ப ஆர்வமாய் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் கோலிவுட்டில் அவருக்கு ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. கடைசியாக தனுஷ் உடன் வேங்கை படத்தில் நடித்தார். அதன்பின்னர் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. மேலும் வர படவாய்ப்புகள் எல்லாத்தையும் அவருக்கு பண்ண விருப்பமில்லை. எந்த மொழி படமாக இருந்தாலும், அதில் இருக்கும் கதையை பொறுத்து, தனக்கு ஏற்றதாக இருக்குமா என்று பார்த்து தான் அவர் நடிக்க விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.