Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தமிழ்ப் படம் 2.0' - கிண்டலுக்கும் ஒரு எல்லை வேண்டாமா ?

09 டிச, 2017 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Tamilpadam2pointO-fun-begins-from-the-Poster

தமிழ் சினிமாவையே அமோகமாகக் கிண்டலடித்து எடுக்கப்பட்ட படமான 'தமிழ்ப் படம்' 2010ம் ஆண்டு வெளிவந்தது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து வெளிவந்த அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியையும் பெற்றது.

7 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு 'தமிழ்ப் படம் 2.0' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சிவா, இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் சித்தார்த் இன்று காலை வெளியிட்டார்.

அந்த போஸ்டரில் '25.05.2018 தியேட்டர்களில் படம் வெளியாகிறது, 26.05.2018 அன்று தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகிறது,” என்ற வாசகங்களுடன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். படங்களைக் கிண்டல் செய்வது பரவாயில்லை. ஆனால், தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பைரசி பிரச்சனையான தமிழ் ராக்கர்ஸ் இணையதளப் பிரச்சனையையும் சேர்த்து கிண்டலடித்திருப்பது ஓவராகவே இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கமும், மற்ற தயாரிப்பாளர்களும் தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனையை அழிக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், அவர்களையும் சேர்த்தே இந்த போஸ்டர் கிண்டலடித்துள்ளது. அதிலும் 'அதிகாரப்பூர்வ பைரசி பார்ட்னர்' என்று அந்த இணையதளத்தின் லோகோவையும் போஸ்டரில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் '2.0' படத்தைக் கிண்டலடித்து, 4 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் படத்திற்கு 'தமிழ்ப் படம் 2.0' என ஒரு தலைப்பு, திரையுலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பைரசி இணையதளத்திற்கு ஒரு இலவச விளம்பரம்?. தமிழ் சினிமாவை நன்றாகவே வளர்க்கிறார்கள் 'தமிழ்ப் படம் 2.0' குழுவினர்....!!!.

Advertisement
அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஹன்சிகாஅடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ... அடுத்த வாரப் போட்டியில் 7 படங்கள் அடுத்த வாரப் போட்டியில் 7 படங்கள்


வாசகர் கருத்து (1)

M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
20 ஜன, 2018 - 21:06 Report Abuse
M Selvaraaj Prabu தமிழ் சினிமாவை எதற்கு வளர்க்க வேண்டும்? ஒரு படத்தில் நடிப்பவர்க்கு கோடிகளில் சம்பளம். பட்ஜெட்டோ 100 கோடி, 200 கோடி மற்றும் 400 கோடி. போப்பா, போய் உன் வேலையை (ஏதாவது இருந்தால்) பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in