'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, பல வெற்றிப் படங்களிலும், பல முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். கடந்த ஆறு வருடங்களில் 15க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
கடந்த ஆண்டில் கூட ஹன்சிகா நடித்து 'அரண்மனை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன்,” ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த ஆண்டில் ஹன்சிகா நடித்து 'போகன்' படம் மட்டுமே வெளியானது. தற்போது பிரபுதேவா ஜோடியாக 'குலேபகாவலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது.
கைவசம் ஒரே ஒரு படத்தை வைத்திருந்த ஹன்சிகா, அடுத்து அதர்வா ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாக உள்ளது. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த ஹன்சிகா, இன்னும் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடிக்காத அதர்வாவுடன் ஜோடி சேர சம்மதித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜீவாவுடன் சேர்ந்து நடித்தவர் அதர்வாவுடன் நடிக்க மாட்டாரா என்றும் கேட்டால் அதுவும் சரிதான். அடுத்த கட்ட ஹீரோக்களுடன் நடிக்க ஹன்சிகா இறங்கி வந்ததால் அவரைத் தேடி இது போன்ற வாய்ப்புகள் நிறைய வரலாம். நடித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்றால் இப்படி ஏதாவது மாற்றம் செய்யத் தான் வேண்டும் என்பது ஹன்சிகாவுக்கும் புரிந்திருக்கும்.