ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பகத்பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பிராமைய்யா, ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 22-ந்தேதி வேலைக்காரன் படம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கு தணிக்கைக்குழு நேற்று யு சான்றிதழ் அளித்துள்ளது. இந்த தகவலை டைரக்டர் மோகன்ராஜா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். வேலைக்காரன் படம் தனது சினிமா கேரியரில் முக்கியமானதொரு படமாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.