இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
தென்னிந்திய நடிகையாக இருந்த இலியானா, இப்போது முழுக்க முழுக்க பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். பாத்சாகோ படத்தில் அஜய் தேவ்கன் உடன் நடித்தவர் இப்போது மீண்டும் அவருடன் ரெய்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அஜய், வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க, அவரின் காதலியாக இலியானா நடித்திருக்கிறார்.
இதுகுறித்து இலியானா கூறியிருப்பதாவது... ரெய்டு படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. அஜய் தேவ்கன் உடன் நடித்தது சிறந்த அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஒரு ஸ்டார் நடிகர் என்று தன்னை காட்டிக்கொள்ளாமல் சாதாரண நடிகர் போன்று நடித்தார் என்றார்.
ரெய்டு படத்தை ராஜ்குமார் குப்தா இயக்க, பூஷண் குமார் மற்றும் மங்கத் பதக் தயாரிக்கிறார்கள். இப்படம் அடுத்தாண்டு, மார்ச் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.