ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வல்லவன் படத்தில் நடித்தபோது அப்பட நாயகி நயன்தாராவை காதலித்தார் சிம்பு. ஆனால் அந்த காதல் சில மாதங்களிலேயே முறிந்து போனது. அதன்பிறகு ஹன்சிகாவை காதலித்தார். அந்த காதலும் தோல்வியடைந்தது. சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வருவதாக நீண்டகாலமாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சிம்பு இசையமைத்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், தொழில் போட்டியாளர்களாக கருதப்பட்டு வந்த சிம்பு - தனுஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.
அப்போது சிம்பு பேசும்போது, எனது கேரக்டருக்கு அத்தனை எளிதில் யாரும் செட்டாக மாட்டார்கள். ஆனால் யுவன் சங்கர் ராஜா எனக்கு நன்றாக செட்டாவார். அவரது கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் செய்யும் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்வார். அதனால் எனக்கு அவர் மாதிரியான குணம் கொண்ட பெண் தான் செட்டாகும். அவரிடம் கூட உங்க ராசியில் யாராச்சும் பெண் இருந்தா சொல்லுங்க கல்யாணம் செய்துக்கிறேன் என்று சொல்வேன் என்றார் சிம்பு.