தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை. உடல் எடையை குறைக்க முழுமூச்சில் இறங்கினார். அதன்பலனாக ஸ்லிம்மாகி உள்ளார்.
இதனிடையே அனுஷ்கா, நீண்டகாலமாக முதுகு வலியினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதே சிறந்த வழி என்று பலரின் அட்வைஸை ஏற்று, இப்போது கேரளாவில் முகாமிட்டு முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.