Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமைதி காக்கும் ரஜினிகாந்த்

08 டிச, 2017 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Rajini-still-Silent?

ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை மீண்டும் மண்டபத்தில் சந்திப்பாரா என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

விஷாலின் திடீர் அரசியல் களம், கமல்ஹாசனின் சமீபத்திய திடீர் மவுனம் இவற்றிற்கு எல்லாம் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என சாமானிய மக்கள் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பரபரப்பை ஏற்படுத்துவார் என நினைக்கப்படுபவர்கள் அமைதியாக இருப்பதும், எதிர்பாராத சிலர் அரசியல் களத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்துவதும் திரையுலகத்திலும் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் அவருடைய அரசியல் நிலவரம் குறித்து என்ன சொல்லப் போகிறார் என அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் பல கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு இதுவே சரியான தருணம் என பலரும் கருதி வருகிறார்கள். இந்த வருடப் பிறந்த நாளில் அந்த அறிவிப்பை வெளியிடாமல் ரஜினிகாந்த் தள்ளிப் போட்டால், இதை விட மீண்டும் ஒரு சிறந்த தருணம் வருமா என்பதும் சந்தேகம் தான். என்ன செய்யப் போகிறார் ரஜினி?, என அடுத்த சில நாட்களில் அவர் மீதான கவனம் இன்னும் அதிகமாகுமா அல்லது அவருடைய பிறந்த நாள் அமைதியாகக் கடந்து போகுமா ?.

Advertisement
சிம்புவுக்கு ஆதரவாக தனுஷ்?சிம்புவுக்கு ஆதரவாக தனுஷ்? ஜெய்யின் அடுத்த த்ரில்லர் படம் ஜெய்யின் அடுத்த த்ரில்லர் படம்


வாசகர் கருத்து (10)

Kailash - Chennai,இந்தியா
08 டிச, 2017 - 18:44 Report Abuse
Kailash ரஜினி அவர்களை நம்பி சுமார் 500 கோடி இறக்கி உள்ளனர் 2 .0 மற்றும் காலா பட தயாரிப்பாளர்கள். ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் அரசியலில் இறங்குவதாக அறிவித்தால் கீழ்த்தர அரசியல்வியாதிகள் இவரோடு நேரடியாக மோத துணிவில்லாமல் இவர் திரைப்படத்தை வைத்து அரசியல் செய்வார்கள். இதெல்லாம் எனக்கே தெரியும் போது அவருக்கு தெரியாதா? படம் ரிலீஸ் ஆன பிறகு முழு மூச்சோடு இறங்குவார். மாற்றம் நடந்தே தீரும். பல குள்ளநரிகள் அவரின் இனத்தை வைத்து செய்யும் அரசியலோ கருத்தோ கூறுவதை நடுநிலை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார்...
Rate this:
Kailash - Chennai,இந்தியா
08 டிச, 2017 - 15:56 Report Abuse
Kailash ரஜினி அவர்களை நம்பி சுமார் 500 கோடி இறக்கி உள்ளனர் 2 .0 மற்றும் காலா பட தயாரிப்பாளர்கள். ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் அரசியலில் இறங்குவதாக அறிவித்தால் கீழ்த்தர அரசியல்வியாதிகள் இவரோடு நேரடியாக மோத துணிவில்லாமல் இவர் திரைப்படத்தை வைத்து அரசியல் செய்வார்கள். இதெல்லாம் எனக்கே தெரியும் போது அவருக்கு தெரியாதா? படம் ரிலீஸ் ஆன பிறகு முழு மூச்சோடு இறங்குவார். மாற்றம் நடந்தே தீரும். பல குள்ளநரிகள் அவரின் இனத்தை வைத்து செய்யும் அரசியலோ கருத்தோ கூறுவதை நடுநிலை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார்...
Rate this:
ramasubramanian - Tuticorin,இந்தியா
08 டிச, 2017 - 15:38 Report Abuse
ramasubramanian நல்லது பண்ணனும்னு அவர் நினைத்தால் அது நடக்கும் அதற்கு ஆண்டவன் துணைநிற்கணும்.கமல் இறங்குவார்னு பார்த்தால் அமைதியாகிட்டாரு,விஷால் அவசரப்பட்டாரு.இவரு இன்னா பண்ண போறாரு.
Rate this:
vino - Chennai,இந்தியா
08 டிச, 2017 - 15:21 Report Abuse
vino ரஜினி யா யாரது ?????
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
08 டிச, 2017 - 14:55 Report Abuse
A.George Alphonse Hereafter he will maintain in silent only.He has seen the full episode of Mr.Vishal R.K.Nagar byelection nomination day and the actors who were in politics and their present condition are made both Mr.Rajinikanth and Mr.Kamalahasan to remains silence till now.No one is keenly waiting for these actors political entry at this moment.It is better and best for these actors not to enter in politics and concentrate only on their professional of acting forever for the betterment of them and our state in coming days.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in