நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள், உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியிலில் இடம் பெற்றிருந்தார். தற்போது ஆசியாவின் கவர்ச்சியான பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
லண்டனிலிருந்து வெளியாகும் ஈஸ்டர்ன் ஐ என்ற பிரபல பத்திரிக்கை ஆண்டுதோறும் ஆசியாவின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த தீபிகா படுகோனே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி புகர் நிஷா ஷர்மாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது, ஆலியாபட்டுக்கு 4வது இடமும், பாகிஸ்தான் நடிகை மஹிரா கானுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது.