Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

அஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை : நிவின் பாலி

08 டிச, 2017 - 02:39 IST
எழுத்தின் அளவு:
Nivin-pauly-likes-to-act-with-Vijay-and-Ajith

பிரேமம் என்ற ஒரு படம், நிவின் பாலியை உலக அளவில் பேச வைத்தது. யதார்த்தமும்,
வித்தியாசமும் தான், இவரை மற்ற நடிகர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.
வித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிவின் பாலியின், நேரடி தமிழ் படம், ரிச்சி. இந்த படம் பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், நிவின் பாலி.

ரிச்சி படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
கவுதம் ராமச்சந்திரன் தான், படத்தின் இயக்குனர். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. ஒரு ரவுடியாக நடித்திருக்கிறேன். நட்டி, படகு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்காக நடித்துள்ளார். இந்த படத்துக்காக சொந்த குரலில் பேசியிருக்கிறேன்.

நேரம் படம் வெளியாகி நான்கு ஆண்டு ஆகி விட்டதே; ஏன் இந்த இடைவெளி?
இதற்கு முன்னும் வாய்ப்புகள் வந்தன. ஆனால், மலையாளத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், தமிழில் நடிக்க முடியவில்லை.

ரிச்சியில் பேசிய வசனங்கள் பற்றி...?
அதுக்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மலையாள வாடை இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு டப்பிங் பேசினேன்.

காதல், ஆக் ஷன்... எந்த வேடத்தில் நடிப்பது எளிது?

இரண்டுமே சிரமம் தான். அதற்கு பதிலாக, புதிய, வித்தியாசமான கதைகளில் நடிப்பது எளிதாக இருக்கும்.

நிவின் பாலிக்காக பிரத்யேகமாக கதை எழுதுறாங்களா?
எனக்காக, யாரும் கதை எழுதுவது போல் தெரியவில்லை. பல கதைகளை எடுத்து வந்து, என்னிடம் கொடுப்பர். அதில், எந்த கதை நன்றாக இருக்கிறதோ, அந்த கதையை தேர்வு செய்வேன்; அவ்வளவு தான்.

பிரேமம் படம் பற்றிச் சொல்லுங்க?
பிரேமம் வெற்றியை எதிர்பார்த்தோம்; ஆனால், இந்த அளவுக்கு பிரமாண்ட வெற்றி பெறும் என நினைக்கவில்லை. அது, எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. எல்லாம், கடவுள் ஆசிர்வாதம் தான்.

நீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி?
எங்கள் குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. இன்ஜினியரிங் படித்து முடித்தபின், பெங்களூரில் வேலை பார்த்தேன். பின், அந்த வேலையை விட்டு விட்டு, கேரளாவுக்கு வந்து பட வாய்ப்புகளை தேடினேன். அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது; இல்லையெனில், ஒரு பிசினஸ்மேன் ஆகியிருப்பேன்.

உங்க நண்பர்கள் வட்டம் ?
எனக்கு சின்ன வயதில் இருந்தே, நட்பு வட்டம் அதிகம். என்னுடன் வேலை பார்த்தவர்கள், இன்னும் தொடர்பில் உள்ளனர். சென்னையில், விக்ரம், ரவி, சிவா, தனுஷ் போன்றோர், என் சிறந்த நண்பர்கள். நேரம் கிடைக்கும்போது சந்தித்து பேசுவோம்.

அஜித், விஜய் கூட நடிக்க வாய்ப்பு இருக்கா?
அந்த அளவுக்கெல்லாம் என்னை கூப்பிடுவாங்களா என தெரியவில்லை. நடிக்க அழைப்பு வந்தால், கண்டிப்பாக சேர்ந்து நடிப்பேன்.

உங்க குழந்தைகள்?
பையன் பெயர், தாவித். 5 வயது ஆகிறது. ரொம்ப சுட்டிப் பையன். ஆறு மாதத்துக்கு முன் பிறந்த பெண் குழந்தை ரைசா தான், இப்போது எங்க வீட்டு டார்லிங்.

நீங்கள் அதிகம் முறை பார்த்த படம்?
தளபதி படம் தான், அதிக முறை பார்த்த தமிழ் படம்; எத்தனை முறை பார்த்தேன் என, எனக்கே தெரியவில்லை.

Advertisement
ஜூலி ஜாலி - ராய் லட்சுமிஜூலி ஜாலி - ராய் லட்சுமி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் : சிவகார்த்திகேயன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு ...


வாசகர் கருத்து (1)

ttt -  ( Posted via: Dinamalar Android App )
14 டிச, 2017 - 06:43 Report Abuse
ttt நீ என்ன பிகரா அஜித் விஜய்யோடு நடிக்க. ஒரு ஹிரோ மாதிரி பேசு. அவங்க என் படத்தில நடிக்கனும் அந்த அளவுக்கு வளர்ச்சி அடைய முயர்ச்சி பண்ணுவேன்னு மாறு தட்டி சொல்லு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in