ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். முந்தைய படங்களை விட இப்படத்தை இன்னும் அருமையாக கொடுக்க வேண்டும் என்று முருகதாஸ் கருதுகிறார். விஜய் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமே தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விபரம் வெளியாகநிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் படம் குறித்த மற்ற தகவல் வெளியாக உள்ளதாம். அப்போது படத்தின் டைட்டீல் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அன்றைய தினம் தான் அஜித்தின் விசுவாசமும் ரிலீஸாக இருக்கிறது. இதனால் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு அடுத்தாண்டு டபுள் கொண்டாட்டமான தீபாவளியாக அமைய போகிறது.