Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் நியாயமும் பிரியா ஆனந்த்தின் அநியாயமும்

07 டிச, 2017 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Why-Amala-paul-out,-Priya-Anand-in-in-Nivin-pauly-movie

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகி வரும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அமலாபால் அதிலிருந்து விலகிவிட, அவருக்கு பதிலாக அந்த வாய்ப்பு நடிகை பிரியா ஆனந்த்திற்கு கைமாறியுள்ள செய்தி தெரிந்தது தான். அமலாபால் இப்படி டிமிக்கி கொடுப்பது வாடிக்கைதான் என சிலர் சோஷியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸோ, “சமீபத்தில் கேரளாவில் பெய்த மழை காரணமாக படப்பிடிப்பில் தேக்கம் ஏற்பட்டது. அதனால் அடுத்ததாக நாங்கள் கேட்ட தேதிகளில் அமலாபால் வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அதனால் தான் அவரால் நடிக்க இயலவில்லை. மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என விளக்கம் கூறியிருக்கிறார்.

தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இருப்பதால் தான் தன்னால் 'காயங்குளம் கொச்சுன்னி'யில் நடிக்க முடியாமல் போனது என அமலாபாலும் விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் இந்தப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ள பிரியா ஆனந்த் சொல்லியிருக்கும் ஸ்டேட்மெண்ட் தான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது..

ஆம், வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பிரியா ஆனந்தின் ஆசையாம். அதனால் இந்தப்பட வாய்ப்பு வந்ததும் தான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்த மூன்று படங்களை தூக்கிப்போட்டு விட்டு இதில் நடிக்க வந்துவிட்டாராம்.

உண்மையான தவறு யார் மேல் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Advertisement
மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் தடுக்க முடியாது : விஷால்மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் ... சாவித்திரி பட டைட்டில் லோகோ வெளியீடு சாவித்திரி பட டைட்டில் லோகோ வெளியீடு


வாசகர் கருத்து (1)

sriwilli - jakarta,இந்தோனேசியா
16 ஆக, 2018 - 15:26 Report Abuse
sriwilli எது பெட்டெர்: பிரியா ஆனந்தமா அல்லது அமலா பாலா??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in