Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கனும் : வரலட்சுமி

07 டிச, 2017 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Varlaxmi-demands-verdict-within-6-months-for-Crime-against-women

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சமீபத்தில் ஷேவ் சக்தி என்ற பெண்கள் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதன் பிறகு மத்திய சட்ட அமைச்சரை டில்லியில் சந்தித்த வரலட்சுமி, நாடு முழுவதும், மாவட்டம் தோறும் மகிளா கோர்ட் (பெண்களுக்கென்று தனி நீதிமன்றம்) அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வரலட்சுமி, நேற்று முதல்வர் எடப்படி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா. ஆகியோரை சந்தித்து மகிளா கோர்ட் அமைப்பது தொடர்பாக பேசினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தவறு செய்பவர்களுக்கு பயம் வரும். பெண்களுக்கான நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். என்றார் வரலட்சுமி.

Advertisement
அருவியில் நடிக்கத் தயங்கிய ஹீரோயின்கள்அருவியில் நடிக்கத் தயங்கிய ... நாச்சியார் வசனத்தால் பாதிக்கப்பட்டது யார்? கோர்ட் கேள்வி நாச்சியார் வசனத்தால் ...


வாசகர் கருத்து (3)

ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
08 டிச, 2017 - 11:35 Report Abuse
ஏடு கொண்டலு ஆண்களுக்கு எதிரான குற்றங்களில் தீர்ப்பை வருடக் கணக்கில் இழுத்தடிக்கலாமா? குற்றத்தில் அதென்ன ஆணுக்கெதிரான குற்றம், பெண்ணுக்கெதிரான குற்றம்? இந்தக் குற்றத்துக்கு இந்த தண்டனை என்று ஆனபிறகு, செய்தவர், பாதிக்கப் பட்டவர் பாலினம் எதுவாக இருந்தால் என்ன? அவசரத்தில் வழங்கப் படும் தீர்ப்பு தவறும் பட்சத்தில் அதற்கு வரலட்சுமியா பொறுப்பேற்பார்? இன்று உலகம் இருக்கும் இருப்பில் feminism பேசாவிட்டால் பிழைப்பு ஓடாது..
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
07 டிச, 2017 - 15:29 Report Abuse
Shanu பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது.
Rate this:
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
07 டிச, 2017 - 15:18 Report Abuse
R.Kumaresan பெண்களுக்கு எதிரான ஒரு சில குற்றங்களுக்கு 4ங்கு அல்லது 6 மாதத்தில் ஒரு சில வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி முடித்துவிடுகிறார்கள், மனைவி கணவன் மீது புகார் கொடுத்து 4ங்கு அல்லது 6 மாதத்தில் அவர்கள் சேர்ந்தோ, பிரிந்தோ இருப்பதற்க்கு தீர்ப்பு வந்த வழக்குகள் இருந்தாலும் இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in