இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சென்னை : மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கவுதம் மேனன். பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மாமல்லபுரத்திலிருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி வந்தார் கவுதம் மேனன். அப்போது, எதிர்பாராத விதமாக செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காரும் சேதமடைந்தது.