பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மறைந்த நடிகர் முரளியின் வாரிசு அதர்வா. இவர் இப்போது செம போத ஆகாத என்ற படத்தை சொந்தமாக தயாரித்து வருகிறார். இது தவிர ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என ஆகிய படங்களையும் கையில் வைத்திருக்கிறார் அதர்வா.
இந்தப் படங்களைத் தொடர்ந்து புதிய த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா. 'டார்லிங்' சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா நடிக்கிறார்.
விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் யோகி பாபு காமெடியானாக நடிக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.