மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அண்மைக்காலமாக கால்ஷீட் பிரச்சனை பண்ணும் நடிகையாக மாறி வருகிறார் அமலாபால். தமிழில் ஜோதிகா நடிப்பில் '36 வயதினிலே' படத்தை இயக்கியர் ரோஷன் ஆண்ட்ரூஸ், 'காயம் குளம் கொச்சுண்ணி' என்ற மலையாள படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நிவின் பாலி, காயம்குளம் கொச்சுண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் அமலா பால் தான். படப்டிப்பிடிப்பு தொடங்க சில வாரங்களே இருந்த நிலையில் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார் அமலா பால். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகியதாக சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் வேறு என்று சொல்கின்றனர் அந்தப் படத்தின் படக்குழுவினர்.
'காயம் குளம் கொச்சுண்ணி' படத்தில் அமலா பால் விலகியதைத் தொடர்ந்து, இப்போது அமலா பாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே பிருத்திவிராஜுடன் 'எஸ்ரா' என்ற மலையாள படத்தில் நடித்துள்ள பிரியா ஆனந்த் நடிக்கும் இரண்டாவது மலையாள படம் இது.
அமலாபாலுக்கு பேசிய சம்பளத்தைவிட மிகவும் குறைவான சம்பளமே ப்ரியா ஆனந்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.