மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தான். இது திரைப்படங்களுக்கும் பொருந்தும். கிடப்பில் போடப்பட்ட படங்கள் மீண்டும் தூசு தட்டப்பட்டு வெளியானாலும் வெற்றி பெற்றதில்லை. சிம்பு நடித்த வாலு உள்ளிட்ட பல படங்கள் உதாரணம்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த, களவாடிய பொழுதுகள் இந்தப்பட்டியலில் சேருமா அல்லது, பழங்கதையை முறியடித்து வெற்றியடையுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுன்னு சில வாரங்கள் இருந்தநிலையில், சில பிரச்னைகளால் பல ஆண்டுகளாக முடங்கியது. முடங்கிக் கிடந்த இப்படத்தை எப்படியாவது வெளியிட்டு விடலாம் என முயற்சித்தார் தங்கர்பச்சான். ஆனால் அது நடக்கவேயில்லை.
இந்நிலையில் களவாடிய பொழுதுகள் படத்தை பிரபுதேவாவின் உதவியுடன் இப்போது ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தப்படத்தை இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதே தேதியில் பலூன் உட்பட வேறு சில படங்களும் வெளியாகின்றன. அன்றைய தினத்திலாவது களவாடிய பொழுதுகள் ரிலீஸாகுமா... என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.