'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
'இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து 'ரெட்டச்சுழி' படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது 'ஆண் தேவதை என்கிற படத்தை இயக்கி வருகிறார்'. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள இயக்குனரும் நடிகரும், 'ஜிமிக்கி கம்மல்' புகழ் பாடகருமான வினீத் சீனிவாசன், ஜிப்ரான் இசையில் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார்..
ஆனால் 'ஜிமிக்கி கம்மல்' பாடல் வெளியாவதற்கு முன்பே 'ஆண் தேவதை' படத்தில் பாடல்பாடி கொடுத்து விட்டாராம் வினீத் சீனிவாசன். இரண்டு வருடங்களுக்கு முன் 'ஒரு வடக்கன் செல்பி' பட வெற்றி விழாவின்போது, “தனியாளாக பெறும் வெற்றியை விட நண்பர்களுடன் சேர்ந்து கிடைக்கும் வெற்றி அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என வினீத் பேசினாராம். அந்த வாக்கியம் ரொம்பவே பிடித்துப்போய்விட, அதனாலேயே அவரை நட்புடன் அழைத்து பாடவைத்தாராம் இயக்குனர் தாமிரா.