Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மா அனுமதி, அடுத்து அப்பாவும் அனுமதி : ஸ்ருதிஹாசன் திருமணம் உறுதி?

06 டிச, 2017 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Shruti-attend-Adhav-marriage-with-her-boyfriend-and-Dad-Kamal

ஸ்ருதிஹாசனும் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அப்பா கமல் இயக்கத்தில் 'சபாஷ் நாயுடு' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனிடையே, ஸ்ருதிஹாசனுக்கும் லண்டைனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேல் ஆகிய இடையே காதல் என செய்திகள் வெளியாகின. அவர்கள் இருவரின் புகைப்படங்களும் அடிக்கடி வெளிவந்தன. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என ஸ்ருதிஹாசனும் சொல்லியிருந்தார்.

கடந்த வாரம் ஸ்ருதிஹாசன், அவரது காதலர் (?), மைக்கேல் கால்சேல்-ஐ அவருடைய அம்மா சரிகாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மூவரும் வெளியில் சென்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தனது திருமணத்திற்கான அனுமதியைப் பெறவே சரிகாவிடம் தனது காதலரை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார் என செய்தி வெளியாகின.

இன்று நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமணத்தில் ஸ்ருதிஹாசன், அவருடைய காதலர் மைக்கேல், அப்பா கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மைக்கேல் பட்டு, வேட்டி சட்டை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டார். ஸ்ருதிஹாசனும், நடிகர் ஆதவ் கண்ணதாசனும் நண்பர்கள். திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்ட ஆதவ் திருமண நிகழ்வில் ஸ்ருதிஹாசன், மைக்கேல், கமல்ஹாசன் ஆகியோர்தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தினர். அம்மா சரிகாவைத் தொடர்ந்து, அப்பா கமல்ஹாசனிடம் மைக்கேலை அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு அனுமதி வாங்கவும் ஸ்ருதிஹாசன் சென்னை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் ஸ்ருதிஹாசன், மைக்கேல் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கமல்ஹாசன் டிவிட்டரில் விரைவில் 'இருமனம் இணையும் திருமண வாழ்க்கை, அவர்தம் மனம் மகிழ்வடைந்தால், நமக்கும் மகிழ்வே, ஒரு பாசமான தந்தையாக...” என வரலாம். அதுவரை காத்திருங்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பாகுபலி 2 பாலிசியைப் பின்பற்றும் 2.0 ?பாகுபலி 2 பாலிசியைப் பின்பற்றும் 2.0 ? மாநகரம் இயக்குநர் படத்தில் சூர்யா? மாநகரம் இயக்குநர் படத்தில் சூர்யா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Shanu - Mumbai,இந்தியா
07 டிச, 2017 - 15:32 Report Abuse
Shanu இவளுக்கு தமிழ்நாட்டில் யாரும் கிடைக்கவில்லையா?
Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
06 டிச, 2017 - 17:52 Report Abuse
M.Guna Sekaran இனிமேல் தான் கச்சேரி ஆரம்பம் எப்படியும் நடிகை லட்சுமி, ராதிகா, நடிகர் கமல் கல்யாண சாதனையா விரைவில் முறியடிப்பார், பொறுத்து இருந்து பாப்போம்? சுருதியை
Rate this:
06 டிச, 2017 - 17:19 Report Abuse
Ashokkumar இவர்தான் அதற்கு சரிபட்டு வருவாராக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in