தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்ருதிஹாசனும் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அப்பா கமல் இயக்கத்தில் 'சபாஷ் நாயுடு' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனிடையே, ஸ்ருதிஹாசனுக்கும் லண்டைனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேல் ஆகிய இடையே காதல் என செய்திகள் வெளியாகின. அவர்கள் இருவரின் புகைப்படங்களும் அடிக்கடி வெளிவந்தன. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என ஸ்ருதிஹாசனும் சொல்லியிருந்தார்.
கடந்த வாரம் ஸ்ருதிஹாசன், அவரது காதலர் (?), மைக்கேல் கால்சேல்-ஐ அவருடைய அம்மா சரிகாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மூவரும் வெளியில் சென்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தனது திருமணத்திற்கான அனுமதியைப் பெறவே சரிகாவிடம் தனது காதலரை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார் என செய்தி வெளியாகின.
இன்று நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமணத்தில் ஸ்ருதிஹாசன், அவருடைய காதலர் மைக்கேல், அப்பா கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மைக்கேல் பட்டு, வேட்டி சட்டை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டார். ஸ்ருதிஹாசனும், நடிகர் ஆதவ் கண்ணதாசனும் நண்பர்கள். திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்ட ஆதவ் திருமண நிகழ்வில் ஸ்ருதிஹாசன், மைக்கேல், கமல்ஹாசன் ஆகியோர்தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தினர். அம்மா சரிகாவைத் தொடர்ந்து, அப்பா கமல்ஹாசனிடம் மைக்கேலை அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு அனுமதி வாங்கவும் ஸ்ருதிஹாசன் சென்னை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் ஸ்ருதிஹாசன், மைக்கேல் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கமல்ஹாசன் டிவிட்டரில் விரைவில் 'இருமனம் இணையும் திருமண வாழ்க்கை, அவர்தம் மனம் மகிழ்வடைந்தால், நமக்கும் மகிழ்வே, ஒரு பாசமான தந்தையாக...” என வரலாம். அதுவரை காத்திருங்கள்.