ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொன்மாலைப் பொழுது படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஆதவ் கண்ணதாசன். இவர், காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை தந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆவார். இவருக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து இவர்களது திருமணம் இன்று(டிச., 6), சென்னை, மேயர் ராமநாதன் செட்டியார் சென்டர், வள்ளியம்மை திருமண மண்டபத்தில் நடந்தது. இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன், ஆதவ் கண்ணதாசனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதி, ஸ்ருதியின் பாய்பிரண்ட் என்று சொல்லப்படும் மைக்கேல் கார்சேல் ஆகியோரும் உடன் சென்றனர். ஸ்ருதி பட்டுபுடவையிலும், மைக்கேல் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்து கவனம் ஈர்த்தார்.