ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
பிக்பாஸ் நிகழச்சியில் பெற்ற நல்லபெயரை சினிமாத்துறையில் தொலைத்து வருகிறார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளர்கள் அவரை டார்ச்சர் பண்ணியதால் மக்களின் அனுதாபத்தைப்பெற்றார் ஓவியா. அதுவே அவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியது.
இந்த வரவேற்பை வைத்து ஓவியாவைத் தேடி பட வாய்ப்புகள் தேடி வந்தன. அவற்றை எல்லாம் நிராகரித்த ஓவியா கடைசியில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக காஞ்சனா - 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க ஓவியாவை அணுகினார்கள். துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது. விஜய்யின் 62ஆவது படமாக உருவாக உள்ள இந்தப்படத்தில் 'தீரன்' படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் உள்ள முக்கிய வேடெமான்றில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கதாநாயகி இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் ஓவியா. இப்போது அந்த கேரக்டரில் 'பிக்பாஸ்' ஜூலி நடிப்பதாக தகவல்.