Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியனாக போட்டியிட்டேன், என் பின்னால் யாருமில்லை : விஷால்

06 டிச, 2017 - 13:53 IST
எழுத்தின் அளவு:
No-one-behind-me,-I-contest-as-an-India-says-Vishal

ஜாதி ரீதியாக போட்டியிடவில்லை, இந்தியனாகத்தான் போட்டியிட்டேன், என் பின்னால் யாருமில்லை என்று கூறியுள்ளார் விஷால்.

நடிகர் விஷால், ஆர்கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார். அவரது மனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றக் கொள்ளப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டவல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்திய விஷால், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...

ஆதாரம்

சுயேட்சையாக போட்டியிட முயற்சித்த என்னை அச்சுறுத்தலாக கருதுவது ஏன்? ஜனநாயக ரீதியில் பெரிய தவறு நடந்துள்ளது. விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டது என அறிவிக்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. 3 மணி நேரத்திற்கு பின் நிராகரிப்பு என அறிவிப்பு வெளியானது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனது வேட்புமனு திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டது. இதை தேர்தல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இந்தியனாக...
மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் இந்தியனாக தான் நின்றேன். தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பிரிக்க ஜாதி ரீதியாக நிற்கவில்லை. தினகரன், கமல், திமுக எனக்கு ஆதரவு என சொல்கின்றனர். ஆனால், எனக்கு எந்த பின்னணியும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்யவே களத்தில் இறங்கினேன். எனக்கு நடந்த அநியாயத்தை பதிவு செய்ய முயற்சி செய்தேன்.

மிரட்டல்
வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டபட்டதால் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கருதுகிறேன். எனக்கு என்ன நேர்ந்தது என்பதை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். நான் அரசியல் கட்சி துவங்குவேனா என்பது பற்றி மக்களிடம் தான் கேட்க வேண்டும். என்னை பற்றி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

என்ன காரணம்
தேர்தல் அலுவலர் மிரட்டப்பட்டாரா என்பது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் அவருடன் பேசி கொண்டிருக்கும்போது அடிக்கடி வெளியில் சென்று போனில் பேசினார். யாரிடமிருந்தோ போன் வந்த பிறகு தான் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.

தேர்தல் அலுவலரை மாற்றிவிட்டால் சரியாகிவிடுமா?
அலுவலரை மாற்றி விட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? நடந்த தவறை பதிவு செய்ய வேண்டும். மாற்றப்பட்டால், என்ன காரணம் எதற்காக மாற்றப்பட்டார் என்பதை தெரிவிக்க வேண்டும். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இவ்வாறு விஷால் கூறினார்.

Advertisement
கருத்துகள் (63) கருத்தைப் பதிவு செய்ய
இன்று சாவித்ரி பிறந்த நாள் - மகாநதி டீசர் வெளியீடுஇன்று சாவித்ரி பிறந்த நாள் - மகாநதி ... விஜய் படத்தை நிராகரித்த ஓவியா...! விஜய் படத்தை நிராகரித்த ஓவியா...!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (63)

பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
07 டிச, 2017 - 14:17 Report Abuse
பொலம்பஸ் என்ன அகம்பாவம், நீ என்ன பெரிய மகாத்மாவா உன் பின்னால் வருவதற்கு....
Rate this:
Vel - Chennai,இந்தியா
07 டிச, 2017 - 10:40 Report Abuse
Vel தம்பி நீ சொல்ற மாதிரி எதிர்காலத்தில் எச்சரிக்கையாய் இரு. பேசாம ஆஃப்ரிக்க அதிபர் போட்டியில் கலந்துகொள்ள இந்தியனா ... வேண்டாம் வேண்டாம் மனுசனா போட்டியிடு. இந்திய தேர்தல் கமிஷன், பிரதமர், கவர்னர், ஜனாதிபதிகிட்டே சொல்லிட்டு அப்புடியே போன மாசம் வந்த ட்ரம்பின் பொண்ணுக்கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிடு. முக்கியமா நாசர்கிட்டே சொல்லிடு.
Rate this:
Sampath,manjamedu - coimbatore,இந்தியா
07 டிச, 2017 - 10:11 Report Abuse
Sampath,manjamedu வேட்பு மனு நிராகரிப்பை நான் கண்டிக்கிறேன், இது தவறு, இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் விஷால் சரியான அரைவேக்காடு, அதிக பிரசங்கி, முந்திரிக்கொட்டை, தமிழும் ஒழுங்கா பேச தெரியாது, ஆங்கிலமும் ஒழுங்கா வராது, நடிகர் சங்கத்தில் எல்லா பிரச்சினையும் தீர்த்து வச்சிட்டாரு , தயாரிப்பாளர் சங்கத்தையும் ஆகா ஓகோன்னு கொண்டுவந்துட்டாரு, இப்ப இவருக்கு எம் எல் ஏ வா வேற ஆகணும், எல்லாம் பதவி பைத்தியம்,இது ஒரு மன நோய்,
Rate this:
senthil - chennai,இந்தியா
07 டிச, 2017 - 09:34 Report Abuse
senthil தமிழனாக விரட்டினோம் .....
Rate this:
sam - Bangalore,இந்தியா
07 டிச, 2017 - 09:33 Report Abuse
sam I read all messages, single person are not supporting him. Will he get deposit?
Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in