ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா, நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர்சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்க, பிரகாஷ்ராஜ் ஒரு கதாசிரியராக நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்குகிறார்.
சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யம் மட்டுமின்றி அவரது இறுதிகாலகட்டத்தின் சில சோகமான நிகழ்வுகளையும் இந்த படம் பதிவு செய்யப்போகிறதாம். இன்று டிசம்பர் 6-ந் தேதி நடிகை சாவித்ரியின் பிறந்த நாள் என்பதால், இன்று மாலை 3 மணியளவில் மகாநதி படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள்.