Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் : ஞானவேல்ராஜா தனி அணி அமைத்து போட்டி

06 டிச, 2017 - 10:39 IST
எழுத்தின் அளவு:
KE-Ganavelraja-contest-in-Distributors-Election

தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து ஞானவேல்ராஜா ராஜினாமா செய்துள்ளார். அவர் சென்னை, செங்கற்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிடுகிறார். இவர் அணியில் தலைவர் பதவிக்கு இவரும், துணைத்தலைவர் பதவிக்கு கே ராஜன், துணை செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம், செயலாளர் பதவிக்கு நேசமணி, பொருளாளர் பதவிக்கு 'மெட்டி ஒலி' சித்திக் போட்டியிடவிருக்கிறார்கள். இதுகுறித்து ஞானவேல்ராஜா நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நண்பர் அசோக்குமார் அவர்களின் தற்கொலை பொதுமக்களையே புரட்டிப்போட்ட ஒரு விசயம். அவருடன் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நெருங்கி பழகியிருக்கிறோம். அவர் ஒரு மென்மையான மனிதர். அவர் இப்படியொரு முடிவு எடுப்பதற்கு ஏதோ ஒரு சில காரணங்கள், நிர்பந்தங்கள் நடைபெற்றிருக்கிறது. அதனை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்னவாகயிருக்கும்? என்று எண்ணிய போது, ஒரு சில நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒரு மாபியா போல் மாட்டிக் கொண்டிருக்கிறது. யார் படமெடுக்க வேண்டும்? யாருக்கு விற்பனை செய்ய வேண்டும்? என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை, 5 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, அதன் மூலம் 5 கோடி ரூபாயை நஷ்டப்படுத்தி, அந்த 5 கோடி ரூபாயையும் அவர்களிடமே வசூலிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த தெரிந்த வித்தைக்காரர்கள் அவர்கள்.

முன்னணி நட்சத்திரம் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதுமுக நடிகர்களின் படமாக இருந்தாலும் அவர்கள் விரும்பினால், அதற்கு ஒரு பிரச்னையை உருவாக்கி, புகார் தர வைத்து, அதற்கு பஞ்சாயத்து செய்து, தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் அசிங்கப்படுத்தி, அவர்களின் மனதைக் காயப்படுத்தி, புதிய விநியோகஸ்தர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்துகொள்வதற்குள், அவர்களின் படத்தால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிரமத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.

இந்த சூழலில், நான் இதுவரை பதினெட்டு படங்களை தயாரித்திருக்கிறேன். பாகுபலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கும்கி போன்று இருபத்தெட்டு படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும் சோதனையும், வேதனையும் தெரியும். ஒரு விநியோகஸ்தருக்கு ஏற்படும் சோகங்களும், இழப்புகளும், வலிகளும் தெரியும். விநியோகஸ்தர் சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு , அங்கு விநியோகஸ்தர்களின் பிரச்சினையைப் பற்றி பேசாமல், ஒரிருவர் பலன் பெறவேண்டும் என்பதற்காக அந்த சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லவர்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று நான் விரும்பும் பெடரேசனிலும் இவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அங்கு செயல்படும் ஒரு சில புல்லுருவிகளின் சுயநலப்போக்கு தடுக்கப்பட்டு, சுதந்திரமாக வியாபாரம் செய்பவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணத்திற்காகவும், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் நலத்திற்காகவும், அசோக்குமார் எடுத்தது போன்ற துயரமான முடிவை ஒருவர் மீண்டும் எடுக்காமல் இருப்பதற்காகவும் நான் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதை தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.

விநியோகஸ்தர் சங்கத்தில் தனி அணி அமைத்து போட்டியிடுகிறேன். எனது அணியில் அனைவரும் புதுமுகங்கள். புது ரத்தம் பாய்ச்சுவது போல் புதிய அணியாக போட்டியிடுகிறோம். நடிகர் சங்க தேர்தலில் எப்படி புதிய அணி வென்று பதவிக்கு வந்ததோ? எப்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி வெற்றிப் பெற்று பதவியேற்றதோ? அதேப்போல் விநியோகஸ்தர் சங்கத்திலும் மாற்றங்கள் உருவாகவேண்டும் என்பதற்காக புதிய அணியாக போட்டியிடுகிறோம்.

இங்கு கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தின் தயாரிப்பாளருக்காவது அப்படத்தின் கதை தெரியும். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு அது கூட தெரியாமல், படக்குழுவினரை நம்பி முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் நஷ்டமடைந்து சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் இந்த விநியோகத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு என்னென்ன உதவிகள் செய்ய இயலும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம்.

இந்நிலையில் நாங்கள் கொடுக்கும் முதல் வாக்குறுதியே பஞ்சாயத்திற்கு வரும் எந்த படத்தையும் நாங்கள் அதாவது சங்க நிர்வாகிகள் விநியோகம் செய்யமாட்டோம். பஞ்சாயத்து தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்த விநியோகஸ்தருக்கு நியாயம் கிடைப்பதற்கான பணியை மட்டுமே செய்யவிருக்கிறோம். இந்த வேலையை சரியாக உறுதியாக செய்துவிட்டாலே போதும் அனைத்து விநியோகஸ்தர்களும் நன்றாக இருப்பார்கள். அவர்களின் தொழிலும் லாபகரமாக இயங்கும். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. அதில் பல நல திட்டங்களைப் பற்றிய அறிவிப்பு இடம்பெறவிருக்கிறது.

இவ்வாறு ஞானவேல்ராஜா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in