Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் வேட்பு மனு மீண்டும் நிராகரிப்பு

05 டிச, 2017 - 18:10 IST
எழுத்தின் அளவு:
Vishal-arrested

சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மிரட்டல் வந்தது

தன்னை முன்மொழிந்த நபர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்தாகவும், நடிகர் விஷால் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் நடிகர் விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் வந்தார். மனு தள்ளுபடி தொடர்பாக காரசாரமாக தேர்தல் அதிகாரியுடன் விவாதித்தார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த துவங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டார்.


மனு தள்ளுபடி ஏன் ?


வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனுவில் தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத முகவரியில் தவறான 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது.


இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். முன்னதாக விஷாலின் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் முறையீடு


சாலை மறியலில் இருந்து விஷால் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு விஷால் மீண்டும் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார். இதனையடுத்து இரவு 8.30 மணியளவில் மனு ஏற்கப்பட்டதாக செய்தியாளர்களுக்கு விஷால் பேட்டியளித்தார்.


நிராகரிப்பு


இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பின் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஷால் தந்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தேர்தல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.


Advertisement
ஹாலிவுட்டில் நெப்போலியன்ஹாலிவுட்டில் நெப்போலியன் தயாரிப்பாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் தயாரிப்பாளர்களின் உள்ளிருப்பு ...


வாசகர் கருத்து (4)

A R J U N - ,இந்தியா
06 டிச, 2017 - 10:09 Report Abuse
A R J U N JUDGEAre you alright? EO: Sir,opposition sir money sir..sorry sir.. J:why are you confused EO:I don't know sir J: Don't you have a common sense and think on your own EO: sir,they have given a BUNDLE sir.. J:O you are unfit to be a Returning Officer and why not you be sent on"GOONDAS ACT"? i RECOMM THE ELECTION COMMISSION TO TAKE APPROPRIATE ACTION
Rate this:
G.Loganathan - Coimbatore,இந்தியா
06 டிச, 2017 - 07:06 Report Abuse
G.Loganathan அடப்பாவமே, ஏற்கனவே சினிமாவிலே டல்லா ஆயிடுச்சி. எப்படியாவது எம் எல் ஏ ஆயிட்டா வாழ் நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும் ன்னு பாத்தா அதுவும் ஊத்திகிச்சே. சரி பொறுமையா இருப்போம் மறுபடியும் ஜல்லிகட்டு போராட்டம் வராமையா போயிடும். எல்லாத்துக்கும் வாழ்க போடர தமிழன்கள் இருக்குற வரைக்கும் நமக்கு கவலையில்லை.
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
06 டிச, 2017 - 02:13 Report Abuse
Shanu இவர் முதலில் ரெட்டி என்கிற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாட்டில் போட்டியிடலாம். இவர் தமிழ்நாட்டில் போட்டியிட போகிறார் என்றால், எதற்கு ஆந்திராகாரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.?? பதவிக்கு அதிகம் ஆசைப்படக்கூடாது.இங்கு போட்டியிட போகிறார் என்றால், முதலில் சினிமா பொறுப்புகளில் இருக்கும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மக்களுக்கு உதவ போட்டியிடலாம்.அதிகம் ஆசைப்பட்டால் அழிவு தான்.
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
06 டிச, 2017 - 00:00 Report Abuse
Bebeto அந்த சுயேச்சை வேட்பாளர்- TTV தினகரன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in