'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள 'விமானம்' படம், வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக இருக்கிறது.. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் மாற்றுத்திறனாளியான ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது.
இந்தப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் என்ற எண்ணிக்கையை இந்த டீசர் எட்டியுள்ளது.. மிக முக்கியமான அம்சமாக இந்தப்படத்தின் டீசரை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ், பிருத்விராஜூக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தை எழுத்தாளர் பிரதீப் எம்.நாயர் என்பவர் இயக்கியுள்ளார்.. கிளாசிக்கல் டான்சரான துர்கா லட்சுமி என்பவர் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.