சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதிவியிலிருந்து ஞானவேல் ராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு தேர்தல் நடந்தது. முந்தைய நிர்வாகிகள் சரிவர சங்கத்தை நடத்தி செல்லவில்லை என்று கூறி விஷால் தலைமையிலான இளம் படை களமிறங்கி வெற்றி பெற்றது. விஷால் தலைவராகவும், ஞானவேல்ராஜா மற்றும் பைவ்ஸ்டார் கதிரேசன் செயலாளராகவும், எஸ்.ஆர்.பிரபு பொருளாளராகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் செயலாளர் பொறுப்பிலிருந்து ஞானவேல் ராஜா, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஞானவேல்ராஜா, தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
ஞானவேல்ராஜா, சென்னை, காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். சங்க விதிகளின்படி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருக்கக் கூடாது என்பதால் அவர் பதவி விலகியிருப்பதாக கூறப்படுகிறது.