வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்தியத் திரையுலகத்தில் இதுவரை வேறு எந்த திரைப்படத்தின் டீசரும் புரியாத ஒரு சாதனையை விஜய் நடித்து வெளிவந்த 'மெர்சல்' படத்தின் டீசர் புரிந்தது. யு டியூபில் இதுவரை 3 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 10 லட்சம் லைக்குகளைக் கடந்தும் இந்தித் திரையுலகில் நம்பர் 1 டீசர் என்ற பெருமையுடன் இருக்கிறது.
அந்த சாதனையை முறியடிக்க வேறு டீசரால் முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். 5 நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் 'மெர்சல்' படத்திற்குப் பிறகு விரைவாக 5 லட்சம் லைக்குகளைப் பெற்ற டீசராக ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறது. இதன் மூலம் தற்போது தமிழ்ப் படங்களிலும், இந்தியப் படங்களிலும் அதிக லைக்குகள் பெற்ற மூன்றாவது டீசராக உள்ளது.
இரண்டாவது இடத்திற்கு முன்னேற 'விவேகம்' பட டீசரின் லைக்கான 6 லட்சம் டீசர்களை 'தானா சேர்ந்த கூட்டம்' பட டீசர் விரைவில் கடக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் முதலிடத்திற்கு முன்னேற வேண்டுமென்றால் 'மெர்சல்' டீசரின் 10 லட்சம் லைக்குகள் வேண்டும். படம் வெளிவர இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' டீசருக்கு வரவேற்பு இருப்பதால் 'மெர்சல்' டீசர் சாதனையைக் கடந்து முதலிடத்தைப் பிடிக்க முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
அப்படி நெருங்கி வந்தால் 'மெர்சல்' டீசரின் லைக்குகளை விஜய் ரசிகர்கள் தானா சேர்ந்த கூட்டத்திற்கு எதிராகக் கூட்ட வாய்ப்புள்ளது.