ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இது ஜிப்ரான் சீசன். ஜிப்ரான் இசையில் நயன்தாரா நடித்த 'அறம்', கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்கள் கடந்த மாதம் வெளியாகின. இந்தப்படங்களைத் தொடர்ந்து ஜிப்ரன் இசை அமைப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மாயவன்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் முதன்முதலாக இயக்கியுள்ள இந்தப்படத்தை அடுத்து, ஜிப்ரான் தயாரித்து இசையமைத்துள்ள 'சென்னை 2 சிங்கப்பூர்'படம் வெளியாகிறது. அப்பாஸ் அக்பர் இயக்கத்தில். கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலசந்திரன், அஞ்சு குரியன் முதலானோர் நடித்திருக்கும் இந்த படம் இம்மாதம் 15-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
இந்த படம் வெளியான சில வாரங்களில் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்துள்ள, ஆண்தேவதை படம் வெளியாகிறது. ஆண்தேவதை படத்தையடுத்து கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' படம் வெளியாக உள்ளது. 'விஸ்வரூபம்-2' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மொத்தத்தில் ஜிப்ரான் காட்டில் அடைமழை