ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்பைடர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 62வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படமும் அவர் ஏற்கனவே விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி, கத்தி படங்களுக்கு இணையான சமூக நோக்கமுள்ள கதையில் உருவாகிறது. அடுத்து ஆண்டு ஜனவரியில் படம் துவங்குகிறது.
இதனிடையே முருகதாஸ், அக்ஷ்ய் குமாரை வைத்து ஹிந்தியில் ஒரு படம் இயக்க உள்ளார். 2004ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்றதோடு, 4 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற "மில்லியன் டாலர் பேபி" படத்தை முறைப்படி உரிமம் பெற்று ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.
குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை கிளின்ட் ஈஸ்வுட் இயக்கி, நடித்திருந்தார். இவரது ரோலில் அக்ஷ்ய் நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிக்பாஸ் புகழ் மரினா குவர் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.