வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அண்ணாதுரை. புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி அண்ணாதுரை, தம்பிதுரை என்ற இரட்டையர் வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக டயானா சாம்பிகா நடித்திருந்தார். விஜய் ஆண்டனி நடித்து வெளியான பிச்சைக்காரன் படத்திற்கு இணையாக இந்த படமும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அண்ணாதுரை படத்திற்கு தமிழகத்தில் எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியான அண்ணாதுரை படம் ஆந்திரா, தெலுங்கானா என்ற இரண்டு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதையடுத்து நேற்று ஐதராபாத்தில் அப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி தனது படத்தை வெற்றிப்படமாக்கிய தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.