ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான், தமிழில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது அந்த எண்ணத்தை கைவிட்டுள்ளாராம் ஷாருக்.
விக்ரம் வேதா படத்தை பார்த்த ஷாருக்கான், அதன் இந்தி உரிமையை வாங்கி, ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தாராம். அத்துடன் தமிழில் மாதவன் நடித்த வேடத்தில் தான் நடிக்கவும் நினைத்திருந்தாராம். ஆனால் தற்போது இந்த திட்டத்தை, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டு விட்டாராம் ஷாருக். அத்துடன் தற்போது, எந்த படத்தையும் ரீமேக் செய்யும் திட்டத்தில் அவர் இல்லையாம்.
டைரக்டர் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய நடிக்க ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளாராம். இப்படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமசிற்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த படம் காரணமாகவே விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக் திட்டத்தை ஷாருக் கைவிட்டுள்ளாராம்.