ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
கிளர்ச்சி கிளப்பும் கிளாமர் கண்கள்... தேகக் கடலில் துள்ளும் இளமை மீன்கள்... ஒடியும் இடையில் நெளியும் நளினம், வெண்மைகள் மோதி செய்த மெல்லின பெண்மையாய்
'ஜூலி 2' படத்தில் நடிப்பில் கலக்கிய நடிகை ராய் லட்சுமி, ஜாலியாக பேசிய நிமிடங்கள்...
* ஜூலி 2 என்ன ஸ்பெஷல்?
இது என்னுடைய 50வது படம். நான் 'பாலிவுட்'டில் அறிமுகமான முதல் படம், இதுவே ஸ்பெஷல் தான்.
* கதை ?
ஒரு நடிகை சினிமாவிற்குள் வந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் போராடும் கதை. இதில், நான் நடிகையாக நடித்தேன் என்று சொல்வதை விட வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.
* 'பிகினி' உடையில் நடித்தது பற்றி?
'பிகினி'யில் நடிக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை 9 கிலோ வரை குறைத்தேன். இந்த
உடையில் நடிக்க நிறைய கஷ்டப்பட்டேன்.
* 50வது படம் என்பதால் 'பாலிவுட்டா' ?
இதற்கு முன் பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், எந்த படமும் நான் எதிர்பார்த்த அளவு இல்லை. இப்போது எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு, வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
* சினிமா அனுபவம் ?
இன்னும் சினிமாவில் கற்று கொண்டு தான் இருக்கிறேன். நான் அறிமுகமான பின், முதல் நான்கு ஆண்டுகள் நல்ல கதைகள் கிடைக்க வேண்டும் என நிறைய சவால்களை சந்தித்தேன். இப்போது, நல்ல கதைகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
* ஏன் இந்த இடைவெளி?
இனி தொடர்ந்து தமிழில் நடிப்பேன், இப்போது 'யார்' என்று ஒரு படம் முடிந்துள்ளது. அடுத்து பாம்பு கதையில் நடித்து கொண்டு இருக்கிறேன், மலையாள படத்திலும் நடிக்கிறேன்.
* தனி விமானத்தில் பயணம் செய்தீர்களாமே
தனி விமானத்தில் நான் பயணிக்கவில்லை, அந்த வதந்தியை நம்ப வேண்டாம்., அப்படி ஒரு கனவு நிஜமாகட்டும்.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது ?
இன்று போல் என்றும் ஆதரவு கொடுங்கள்.