ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் ஒவ்வொரு படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பு இருந்தது. அதைப்போலவே தற்போது, விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் சாமி-2 படத்தின் கதையும் சாமி படத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. அதனால் தான் சாமியில் நடித்த விக்ரம், திரிஷாவை மீண்டும் இணைக்கயிருந்தார் டைரக்டர் ஹரி.
முதலில் நடிக்க சம்மதம் சொன்ன த்ரிஷா, பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் நடிக்கயிருந்த வேடத்தில் வேறு யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும், இந்த படத்தில் சாமி படத்தில் த்ரிஷா நடித்திருந்த சில காட்சிகள் இடம் பெறுகிறதாம். அதாவது, கடந்த காலத்தை விக்ரம் அசைபோடும் சில காட்சிகளில் த்ரிஷா வருகிறாராம். ஆக, சாமி-2 படத்தில் ஏதோ ஒரு வகையில் த்ரிஷாவும் இருப்பதாக சொல்கிறார்கள்.