'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
அட்டகத்தி, பீட்சா உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சி.வி.குமாருக்கு திடீரென இயக்குனர் ஆக ஆசை வந்தது. தயாரிப்பில் இருந்த மற்ற படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்குநராக மாறி 'மாயவன்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப்பும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஏற்கெனவே பல தடவை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை.
இதற்கிடையில் பைனான்சியர் மதுரை அன்புவிடம் வாங்கிய கடன் பிரச்னையால் படம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன. எனவே மாயவன் படத்தை இம்மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் சி.வி.குமார்.