'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கார்த்தி நடித்த 'தீரன்' படத்தை கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியிட்டது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். தீரன் அதிகாரம் ஒன்று படம் கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ள நிலையில், இன்னொரு படமான 'அருவி'யையும் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருவி' திரைப்படம் கதாநாயகியை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். அதிதி பாலன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளது. அதோடு, சமீபத்தில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 'அருவி' படம் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. அப்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இதேபோல்தான் ட்ரீம்வாரியர் தயாரிப்பில் அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருத்தன் படமும் படத்துறையினரின் பாராட்டுதல்களைப்பெற்றது. ஆனால் படம் தியேட்டருக்கு வந்தபோது ரசிகர்கள் அந்தப்படத்தை ஆதரிக்கவில்லை.