ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்க, 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈஞானவேல் ராஜா தயாரித்து வரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. சூர்யாவும், விக்னேஷ் சிவனும் இணைந்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நேற்று முன் தினம் வெளியான இப்படத்தின் டீஸரைப் பார்க்கும்போது ஸ்பெஷல் 26 என்ற ஹிந்திப்படத்தின் சாயல் தெரிகிறது.
ஸ்பெஷல் 26 படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை நடிகர் தியாகராஜன் வாங்கி வைத்திருக்கிறார். 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக சிக்கல் உருவாகும் என தெரிகிறது.