என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் இருக்கும் வாரிசு நடிகர், நடிகைகளுக்குப் பஞ்சமேயிருக்காது. ஒரு குடும்பத்தில் இருந்தே எண்ணற்ற, நடிகர்களும், நடிகைகளும் வந்திருக்கிறார்கள். அவர்களது 'ஃபேமிலி ட்ரீ'யை வரைந்துதான் யார், யாருடைய மகள், மகன் என நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோரது குடும்பங்கள் இருக்கும்.
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து தெலுங்குத் திரையுலகத்தில் 'ஒக்க மனசு' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. இவர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள். இவருடைய சகோதரர் வருண் தேஜ்-ஜும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகன்தான். வருண் தேஜ், சாய் பல்லவி நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஃபிடா' படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஒரு படம்.
தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் நாயகியாக நடித்து விட்டு தமிழுக்கு 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்குத் திரையுலகத்திலும், தெலுங்கு மீடியாக்களும் இந்த டீசரைப் பார்த்து நிஹரிகாவை பாராட்டி வருகின்றன. நகைச்சுவை கலந்த கதாபாத்தில் நிஹரிகா பொருத்தமாக நடித்திருக்கிறார் என டீசரைப் பார்த்தே பாராட்டி வருகிறார்கள்.
நிஹரிகாவின் அப்பா நாகேந்திர பாபு, தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'இந்திரஜித், விழித்திரு' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.