ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
'விவேகம்' படத்திற்குப் பிறகு அடுத்து நடிக்க உள்ள படத்தில் 'சால்ட் அண்ட் பெப்பர்' தோற்றத்திற்கு அஜித் குட் பை சொல்லிவிடுவார் என்று எப்போதோ நாம் கூறியிருந்தோம். அது போலவே 'விசுவாசம்' படத்தில் அஜித் மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்கத் தன்னை தயார்படுத்தி விட்டார் என சமீபத்தில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
'விசுவாசம்' படத்திற்காக தன் உடல் எடையையும் குறைத்துவிட்டார் அஜித். சிவா தான் படத்தின் இயக்குனர் என்பது பல ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது அஜித்திற்கும் தெரியும். அந்தப் பேச்சை தன்னுடைய தோற்றத்தை மாற்றியதன் மூலம் குறைத்துவிட்டார்.
தனக்குத் திருப்புமுனையைத் தந்தப் படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவை மீண்டும் இசையமைக்க அஜித் அழைத்திருப்பதும் அவரிடம் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம். படத்தின் தலைப்பை படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே அறிவித்ததிலும் மாற்றம். இப்படி 'விசுவாசம்' படத்தில் ரசிகர்களுக்குப் பிடித்த பல விஷயங்களைச் செய்ய அவர் முடிவெடுத்துள்ளாராம்.
ஹீரோயின் தேர்வு கூட வழக்கமான ஹீரோயினாக இருக்காது, அவருடன் முன்னர் நடித்த ஹீரோயின்கள் கண்டிப்பாக இருக்காது என்கிறார்கள். இதற்காக பாலிவுட், டோலிவுட், மாலிவுட் என அசத்தலான புது ஹீரோயினை தமிழில் அறிமுகப்படுத்த தேடி வருகிறார்களாம்.