தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இரண்டு நாட்களுக்குள்ளாகவே யு டியூபில் 50 லட்சம் பார்வைகள், 3 லட்சம் லைக்குகளைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடத்தில் வெளிவந்த டீசர், டிரைலர் ஆகியவற்றின் பார்வை சாதனைகளும், லைக் சாதனைகளும் மிக அதிகமாகியுள்ளன.
'பைரவா' சாதனையை 'விவேகம்' முறியடித்தது. 'விவேகம்' சாதனையை 'மெர்சல்' முறியடித்தது என போட்டி போட்டு அஜித், விஜய் படங்கள் தான் யு டியுபில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றன. அந்த விதத்தில் மிக விரைவாக பார்வைகளையும், லைக்குகளையும் பெறுவதில் விஜய், அஜித் இருவருக்குப் பிறகும் சூர்யா தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு யு டியூபில் அதிகம் பாப்புலர் ஆக இருக்கும் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர இருக்கும் 'வேலைக்காரன்' டீசர் கூட இதுவரை யு டியுபில் ஒரு லட்சம் லைக்குகளையும், 50 லட்சம் பார்வைகளையும் மட்டுமே தாண்டியுள்ளது. விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'ஸ்கெட்ச்' டீசரும் அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது. அந்த டீசருக்கும் 50 லட்சம் பார்வைகளும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும்தான் கிடைத்துள்ளது.
மேலும், அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் வரிசையில் 'மெர்சல், விவேகம், கபாலி' ஆகிய படங்களுக்கு அடுத்து நான்காவது இடத்தை 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் பிடித்துள்ளது. எனவே, விஜய், அஜித்திற்குப் பிறகு சூர்யாவுக்குச் சேர்ந்துள்ள 'கூட்டம்' அதிகம் என்று தாராளமாகச் சொல்லலாம்.