ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம் ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்க ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கயிருந்தார். அதையடுத்து அவருக்கு சரித்திர காலத்து போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடை பெற்ற சங்கமித்ரா பர்ஸ்ட் லுக் வெளியீட்டிலும் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
அதனால், அவர் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது இந்தி நடிகை திஷா பதானி கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது செட் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சங்கமித்ரா படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் தொடங்கயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.