தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவாஜி குடும்பத்தில் இப்போது மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கிறது. ஒன்று தாய் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்ஷ்ன். அடுத்து சிவாஜியின் மூத்த பேரனும், ராம்குமாரின் மகனுமாக துஷ்யந்தன் தொடங்கி உள்ள ஈஷான் புரொடக்ஷ்ன். அடுத்தது சிவாஜியின் இளைய பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தொடங்கியுள்ள பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம்.
இதில் ஈஷான் புரொடக்ஷ்ன் மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்தை தயாரித்தது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறது. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார், எழில் இயக்குகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இமான் இசை அமைக்கிறார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். எழிலின் உதவியாளர் முருகன் கதை எழுதியுள்ளார், இன்னொரு உதவியாளர் ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. சிலுக்குவார் பட்டி சிங்கம், பொன் ஒன்று கண்டேன் படங்களில் நடித்து முடித்துள்ள விஷ்ணு அடுத்து நடிக்கும் படம் இது.