ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள 'அண்ணாதுரை' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை, 'பிக்சர் பாக்ஸ் கம்பெனி' என்ற நிறுவனம் சார்பில் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'கருப்பன்' படத்தைத் தொடர்ந்து பிக்சர்பாக்ஸ் கம்பெனி 'அண்ணாதுரை'படத்தை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுக்க 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுவரை விஜய் ஆண்டனி நடித்த படங்கள் சுமார் 300 தியேட்டர்கள் என்ற அளவிலேயே வெளியானது. முதன்முறையாக அண்ணாதுரை படத்தை 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 3 நாள் வசூலிலேயே லாபத்தை எடுத்துவிடமுடியும் என்று நம்புகின்றனர்..