பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட்டிலும் தற்போது, 'ஜேம்ஸ் பாண்ட்' வகை படங்களுக்கு செமத்தியான கிராக்கி நிலவுகிறது. இதை நன்கு அறிந்த சல்மான் கான், அடுத்து நடிக்கும், டைகர் ஜிந்தா ஹே என்ற படத்துக்கு, அந்த வகை கதையைத் தான் தேர்வு செய்துள்ளார்.
இதில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, 'பாலிவுட் பியூட்டி குயின்' கத்ரீனா கையீப். இதில், அதிபுத்திசாலி உளவாளிகளாக, சல்மானும், கேத்ரினாவும் நடித்துள்ளனர். ஐந்து நாடுகளில் உள்ள சமூக விரோதிகளை களையெடுப்பது தான், இந்த உளவாளிகளின் வேலையாம். தன்னைப் பற்றி, அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்தாலும், அதை மறுத்து, பெரும் பரபரப்பு எதையும் ஏற்படுத்தாமல், அமைதியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான், கத்ரீனாவின் வழக்கம்.
'என் அமைதியான குணத்தால் தான், டைகர் ஜிந்தா ஹே போன்ற பிரமாண்ட பட்ஜெட் படங்கள் எனக்கு தொடர்ந்து கிடைக்கின்றன' என, பெருமையுடன் கூறுகிறார், கத்ரீனா.